Grant of 60 days Special Maternity Leave in case of death of a child soon after birth/ stillbirth - regarding

Translated in Tamil
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
சிறப்பு மகப்பேறு விடுப்பு 60 நாட்கள் வழங்குவது குறித்து DOPT யின் 02.09.2022 தேதியிட்ட உத்தரவின் சாராம்சங்கள்
1.குழந்தை பிறப்பதற்கு முன்பே Maternity leave avail செய்து, குழந்தை பிறந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தாலோ அல்லது இறந்தே பிறந்தாலோ, குழந்தை இறந்த அந்நாளிலிருந்து,அத்துயரில் இருந்து தாய் மீண்டு வர, 60 நாட்கள் Spl Maternity leave வழங்கப்படும்.பேறு காலத்திற்கு முன்பு எடுத்த Maternity leave, அந்த ஊழியர்க்குரிய பிற விடுப்பில் ஏதேனும் ஒரு வகையில் கழித்துக் கொள்ளப்படும். மருத்துவ சான்றிதழ் தேவை இல்லை.
2. Maternity leave எடுக்கும் முன்பே குழந்தைப் பிறந்து 28 நாட்களுக்குள் இறந்தாலோ அல்லது இறந்தே பிறந்தாலோ குழந்தை இறந்த அந்நாளிலிருந்து, 60 நாட்கள் Spl Maternity leave வழங்கப்படும்.
3. குழந்தைக் கருவாகி 28 வாரங்களோ அதற்கு மேலோ ஆன பிறகு அவ்வாறு நேருமாயின் இந்த விடுப்பு வழங்கப்படும்.
4. குழந்தைகள் எண்ணிக்கை இரண்டிற்கும் கீழிருக்கும் பட்சத்தில் மட்டுமே இவ்விடுப்புச் சலுகை வழங்கப்படும்.
5. அரசு மற்றும் CGHS அங்கீகாரம் பெற்ற மருத்துவமணையிலோ அல்லது Emergency Certificate பெற்று பிற மருத்துவனைகளிலோ அப்பிரசவம் நடைபெற்றிருக்க வேண்டும்
நன்றி
http://PostalRADAR.blogspot.com/2022/09/grant-of-60-days-special-maternity.html

Comments
Post a Comment
Post a comment