Mathivananin Oorulagam - ( Tamil Entertainment )
பெயர் சூட்டுங்கள்! பரிசு காத்திருக்கிறது!!
அன்பார்ந்த நண்பர்களுக்கு!,
ஒரு நம்பிக்கையில் இந்த வலைப்பூவை துவக்கியுள்ளேன். அந்த நம்பிக்கை உங்கள் ஆதரவுதான்!. இந்த வலைப்பூவை மேலும் மெருகூட்ட உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை அவ்வப்பொழுது வழங்க வேண்டுகிறேன். குறைகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள். அதுவே இதன் வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும்.
மேலும் இந்த வலைப்பூவை, இப்போது முதல்சுற்றுக்கு மட்டுமே அறிமுகப்படுத்துகிறேன். காரணம் வலைப்பூ துவங்கலாம் என்று உடனடியாக முடிவெடுத்தபோதும், பெயர் வைப்பதற்கு உட்கார்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் யோசித்தாலும் நல்ல பெயர் இந்த மூளைக்கு எட்டவில்லை. . முடிவெடுத்த நல்ல பெயர்கள் ஏற்கனேவே பயன்படுத்தப்பட்டுவிட்டன!. அவற்றில் மூக்கால் வாசி துவங்கிய நிலையிலேயே மேம்படுத்தாமல் உள்ளன. (தமிழ்த்திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதிலும் இதே சிக்கல்தான் நீடிக்கிறது)எனவே, தற்காலிகமாகoorulagam என்ற இந்த பெயரை சூட்டியுள்ளேன். வேறு நல்ல பெயர் தேவைப்படுகிறது.
எனவே, மேலும் இந்த மூளைக்கு சிரமம் கொடுக்காமல், அந்த பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்த வலைப்பூவுக்கு பொருத்தமான நல்ல பெயரை தெரிவியுங்கள். அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்து ஏற்கனவே பயன்படுத்தாமல் இருந்தால், இந்த தளத்திற்கு பயன்படுதிக்கொள்கிறேன்.
மேலும்,
முடிவாக தேர்ந்தெடுக்கும் பெயருக்கு பரிசு காத்திருக்கிறது.
நன்றி!
Comments
Post a Comment
Post a comment